About This Event
வெறுப்பது யாராக இருந்தாலும்,
நேசிப்பது நீங்களாக இருங்கள்.
இறக்கத்தான் பிறந்தோம் என்றால்,
இரக்கத்தோடு இருப்போம்.”
இந்த பொன்மொழிகளின் ஆழமான பொருளை
நம் வாழ்க்கையில் செயல்படுத்தும் நோக்கோடு,
புனித ஜோசப் உடல் வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பாக,
2026 புத்தாண்டின் முதல் நாளில்,
பல அன்புப் பணிகளை மேற்கொண்டதில்
மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.
இந்த இனிய நாளில்,
சாலையோரங்களில் கேட்பாரற்ற நிலையில் வாழும் மக்கள்,
உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு
உதவியற்ற நிலையில் தள்ளப்பட்டவர்கள்,
பேருந்து நிலையங்களிலும்
நிழற்குடைகளிலும் தஞ்சம் புகுந்திருக்கும் மனிதர்கள்—
இவர்களை நேரில் சந்தித்து,
உணவு பொட்டலங்களை வழங்கினோம்.
மனிதம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை
நம் செயல்கள் மூலம் வெளிப்படுத்தி,
அன்பும் இரக்கமும் நிறைந்த சமூகத்தை
உருவாக்குவதில் தொடர்ந்து பயணிப்போம்.
வாருங்கள் இந்த நிகழ்வினை காண்போம்